/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவஹர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஜவஹர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 19, 2024 11:50 PM

நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி., கட்டுப்பாட்டில் ஜவஹர் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி 12வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
ஜவஹர் கல்வி கழக செயலர் மூர்த்தி தலைமை தாங்கினார். என்.எல்.சி., இயக்குநர்கள் சுரேஷ் சந்திரசுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களின் மனிதவளத்துறை பொது மேலாளர் ஓ.எஸ். அறிவு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
ஜவஹர் கல்விக் கழக தலைவர் ஜாஸ்பர் ரோஸ் வரவேற்றார்.
கல்லூரி செயலர் ராஜ்மோகன் ஆண்டறிக்கை வாசித்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக வாயிலாக 2021- 2022ம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த 449 மாணவ, மாணவிகளுக்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்வதற்கான பயணம் இன்று தொடங்குகிறது, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மாணவர்களுடையது. சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொண்டு மாணவ மாணவிகள் வெற்றி பெற வேண்டும் என்றார்.
கல்லுாரி முதல்வர் கிப்ட் கிரிஸ்டோபர் தனராஜ் நன்றி கூறினார்.
ஜவஹர் கல்விக் கழக துணைத் தலைவர் ராணிஅல்லி, ஜவஹர் பள்ளி செயலர் பங்கஜ் குமார், பள்ளி துணை செயலர் அருளழகன் கலந்து கொண்டனர்.