/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 29, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் நிர்மலா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல், 623 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி செயலாளர் விஜயகுமார், நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், மோகன் தாஸ், சுப்ரமணியன், வைரமாணிக்கம், ராமலிங்கம், தாளாளர் தனி செயலாளர் ஜவகர், கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் பூர்ணிமா நன்றி கூறினார்.