மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 10, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி.,ஜெயக்குமார், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, டிப்ளமோ கல்வியின் முக்கியத்துவம், அதன் மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
மகாலட்சுமி கல்வி குழுமங்களின் தலைவர் ரவி, கல்லுாரி தாளாளர் தேவகி, கல்லுாரி துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், இயக்குனர் மதுமதி, காவியா பிரியா வாழ்த்தி பேசினர்.
விழாவில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் இளவரசன், மேலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி மற்றும் துறைத் தலைவர்கள் செய்திருந் தனர்.
