ADDED : ஏப் 19, 2026 11:05 PM

அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி ரெயின்போ ஆங்கிலப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். நிர்வாகி ரவிச்சந்திரன் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவ, மாணவிகள் 125 பேருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
உதவி ஆசிரியை சிவரஞ்சனி நன்றி கூறினார்.
