/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு
ADDED : ஏப் 02, 2025 05:55 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழுமம், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலர் மற்றும் பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், சி.இ.ஓ., அருண்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் சக்திவேல் வரவேற்றார். மாநில த்ரோ பால் சங்க தலைவர் பால விநாயகம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன், அமெச்சூர் சிலம்பம் அசோசியேஷன் துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். கே.ஜி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினர்.

