ADDED : மார் 29, 2026 05:13 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டியில் ஜான்டூயி மாண்டிசோரி பள்ளியில் 16ம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார்.
முதன்மை முதல்வர் வாலண்டினாலெஸ்லி, இணை செயலர் நிதின்ஜோஷ்வா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஜான்டூயி பள்ளியின் முன்னாள் மாணவி ஜெயஸ்ரீ கலந்து கொண்டுகுழந்தைகளின் ஆரோக்கியம் உடல் மற்றும் மனவளர்ச்சி குறித்து பேசினார்.
குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
