ADDED : அக் 23, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் உள்ள கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், பள்ளி தாளாளர் அய்யப்பன், பொருளாளர் ராமலிங்கம், ஆலோசகர் ஆசைத்தம்பி, செயலாளர் நஜ்முதீன், இயக்குநர்கள் கோவிந்தசாமி, உபைதுார் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட், அன்பழகன், முத்தையன், முதல்வர் சுகந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.
இப்பள்ளியின் கிளை நிறுவனமான கடலுார் குமாரப்பேட்டை நியூ மில்லேனியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லூரி, புதுச்சேரி கிரீன் டெக் பள்ளியிலும்; பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.
