ADDED : மார் 31, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் கிராம ஊராட்சிகளில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் கடலுார் மாவட்டத்தில் அரசு அறிவித்த கிராம சபைக் கூட்டம் பிசுபிசுத்து போனது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால் அன்று தி.மு.க.,வினர் மத்திய அரசு நுாறுநாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க., சார்பில் 100க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் சேர்க்க பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து கிராம சபை கூட்டம் என பொதுமக்களை திரட்டி அழைத்து வந்ததால், முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமல் பிசுபிசுத்து போனது.