ADDED : மார் 31, 2025 11:13 PM

அ நிறம் | அளவு
புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நேற்று நடந்தது.
ஊராட்சி செயலாளர் முருகவேல் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் ஜேசு முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி பங்கேற்று, கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், இதுவரை நடந்த திட்டப் பணிகள், மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து விவாதித்தார்.
மக்கள் நல பணியாளர் கிரிஜா நன்றி கூறினார்.
