UPDATED : ஆக 15, 2026 10:08 PM
ADDED : ஆக 15, 2026 09:32 PM
திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சி, கீழநெமிலியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நல்லுார் ஒன்றிய பொறியாளர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கோடீஸ்வரன் வரவேற்றார். ரேஷன் கடை விற்பனையாளர்கள் சுமதி, ரஞ்சனி, சுகாதாரத்துறை மற்றும் போலீசார், கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைப்பது, தமிழ்நாடு மகளிர் மேம்பாடு திட்டம் செயல்படுத்துவது, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், இறையூர், சவுந்திரசோழபுரம், கொசப்பள்ளம், வடகரை, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
