/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிக்க பணம் தராத பாட்டி கொலை பாசக்கார பேரன் கைது
/
குடிக்க பணம் தராத பாட்டி கொலை பாசக்கார பேரன் கைது
ADDED : டிச 09, 2024 05:00 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குடிப்பதற்கு பணம் தர மறுத்த பாட்டியை, கட்டையால் தாக்கி கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரஹாசன் மகன் வேல்முருகன், 35; இவர் அடிக்கடி குடித்துவிட்டு, பிரச்னை செய்து வந்ததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வேல்முருகன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு, அவரது பாட்டி முத்துக்கண்ணு, 70; என்பவரிடம், வேல்முருகன் குடிக்க பணம் கேட்டார். தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், கட்டையால் முத்துகண்ணுவை சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துகண்ணு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர்.