/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கல்
/
கிள்ளை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கல்
ADDED : செப் 23, 2024 08:00 AM

சிதம்பரம்: சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில், பழங்குடியின மாணவர்கள் படிக்கும் கிள்ளை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா, தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து,கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் பழங்குடி இன மாணவ மாணவிகள் பயிலும் அரசு ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அதற்கான ஆணையை பல்கலை துணைவேந்தர் கதிரேசன், பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேலிடம் வழங்கினார்.
நிழ்ச்சியில் பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய இயக்குனர் அறிவுடைய நம்பி,ரமேஷ்குமார், கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை அரவிந்த் பாபு, உதவி பேராசிரியர் ஜெயபிரகாஷ், இந்தியா டீம் சியாட்டில் அமெரிக்க தலைவர் தேவராஜ் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் லாவண்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.