/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பள்ளிக்கு உதவிகள் வழங்கல்
/
சிதம்பரம் பள்ளிக்கு உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 10, 2024 12:06 AM
சிதம்பரம், : சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு பெண்கள் பள்ளிக்கு திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜமோகன், செல்வகணபதி முன்னிலை வகித்தனர். சங்க சாசன தலைவர் முகமது யாசின் சார்பில் பிரசங்க மேடை, மக்கள் மருந்தக உரிமையாளர் கேசவன் சார்பில் 1,000 சானிட்டரி நாப்கின் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் தீபக்குமார், சீனுவாசன், தேசிய நல்லாசிரியர் டேவிட் ஏகாம்பரம், சுசில்குமார் ஜல்லானி, ரவிச்சந்திரன், பாவிக்படேல், விஜயபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சஞ்சீவ் குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ரோட்டரி பொருளாளர் அருள் நன்றி கூறினார்.

