/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி
/
ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி
ADDED : ஜன 22, 2025 07:15 AM

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே, ஆலமரம் முறிந்து சாலையில் விழுந்ததில் மொபட்டில் சென்ற கீரை வியாபாரி உடல் நசுங்கி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், 60. கீரை வியாபாரி. நேற்று காலை 5:45 மணியளவில், தனது மொபட்டில், விருத்தாசலத்தில் கீரைகளை விற்பனைக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
உளுந்துார்பேட்டை சாலையில், கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தை கடந்தபோது, சாலையோரம் இருந்த நுாற்றாண்டுகால ஆலமரம் முறிந்து விழுந்தது.
இதில் மொபட்டில் சென்ற விநாயகம் சிக்கி, உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளையை அகற்றி, உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
விபத்து காரணமாக, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.