/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன
ADDED : மார் 05, 2024 06:22 AM

கடலுார்: கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், கலெக்டர் அருண்தம்புராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா மாற்றம் என 760 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது துறை வாரியாக அலுவலர்கள் விசாரணை செய்தனர். கோரிக்கை மனு அளித்த 10 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஊன்றுகோல், மூன்று நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை வழங்கப்பட்டன. 3 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், வரப்பெற்ற மனுக்கள் மீது தீர ஆராய்ந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதி மனுக்கள் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காண, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

