/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி ராணுவத்திற்கான குறைதீர் கூட்டம்
/
மாஜி ராணுவத்திற்கான குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 15, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி கடலுாரில் நடக்கிறது.
கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு;
கடலுார் மாவட்ட முன்னாள் ராணுவப் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்தில் கடலுார் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில் உள்ள ராணுவத்தினர் குடும்பத்தினர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இரு பிரதிகளாக தயார் செய்து, அடையாள அட்டை நகல் இணைத்து கூட்டத்தில் கொடுக்க வேண்டும்.