ADDED : மார் 15, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
கடலுார் தாலுகா அலுவலகத்தில் வட்டவழங்கல் பிரிவு சார்பில் நடந்த முகாமில், தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்துகோரிக்கை மனுக்களை பெற்றார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரிமாற்றும் மற்றும் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
வருவாய்ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
