ADDED : நவ 12, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: மளிகை கடையை அடித்து நொறுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்தவர் அஜீஸ்கான்,50; இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். இவர் இன்று (நவ.,12) காலை 10:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுந்தர்,31; அத்துமீறி மளிகை கடையில் நுழைந்து, பிஸ்கட், பன் ஆகியவற்றை சாப்பிட்டார். அதனை கண்ட அஜீஸ்கான், கண்டித்தார்.
அதில் ஆத்திரமடைந்த சுந்தர், அஜீஸ்கானை ஆபாசமாக திட்டி, தாக்கி கடையில் இருந்த மளிகை பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். சேதமதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து சுந்தரை கைது செய்தனர்.
