/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் வழிகாட்டல் பயிற்சி முகாம்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் வழிகாட்டல் பயிற்சி முகாம்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் வழிகாட்டல் பயிற்சி முகாம்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் வழிகாட்டல் பயிற்சி முகாம்
ADDED : செப் 23, 2024 07:44 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 5 நாட்கள் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் கதிரவன்துவக்கி வைத்தார். முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். அறிவியல் மற்றும் மனிதவியல் துறைத்தலைவர்திருவாசகமூர்த்தி வரவேற்றார்.சென்னை அபெக்ஸ் சீகர்ஸ் நிறுவன மூத்த மேலாளர்கள் தாஜ்நிஷா,பெட்ரிஷியா பெர்னான்டஸ், அலிஸா ஜான்சன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கான கல்வித்திறனை வளர்க்கும் முறைகுறித்து பேசினர்.
முதலாமாண்டு பயிலும் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வேதியியல் துறை உதவி பேராசிரியர் வாஞ்சிநாதன் நன்றி கூறினார்.