/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்
/
'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்
ADDED : ஆக 05, 2025 02:00 AM

கடலுார்: கடலுாரில் 'போக்சோ' வழக்கில் கைதானவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
கிள்ளை அடுத்த எம்.ஜி.ஆர்., திட்டைச்சேர்ந்தவர் தங்கம் மகன் இமயவர்மன்,25; இவர் கடந்த 15ம் தேதி, 12 வயது பள்ளி சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் இமயவர்மன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இமயவர்மனை கைது செய்தனர்.
இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு , குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் இமயவர்மனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை போலீசார் நேற்று வழங்கினர்.