நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்சங்கம் மற்றும்அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் சார்பில் ஐந்தாம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.
குருபூஜை விழா ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கமாநில பொருளாளர் ரேவதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ., க்கள் பாண்டியன்,அருண்மொழிதேவன் பங்கேற்று பேசினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நிர்வாகிகள்பாலசுப்ரமணியன், குணசேகரன்,ஜோதி,பிரதாப், செல்வம், கணேசன், இசக்கி முத்து, வேல்முருகையன், சங்கரன், ஹரிஹரன், மீனாம்பிகா, சசிகலா, விஜயலட்சுமி, சரோஜா, அரிதா, வையாபுரி,பிரதாப்சிங், ரோஹித் குமார், ஆகாஷ், மற்றும்சிவ தொண்டர்கள், குலாலர் மக்கள் பங்கேற்றனர்.

