ADDED : அக் 05, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: குட்கா பதுக்கி விற்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, இறையூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மளிகைக்கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 735 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த முத்து, 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.