/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கல்; நெல்லிக்குப்பத்தில் ஒருவர் கைது
/
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கல்; நெல்லிக்குப்பத்தில் ஒருவர் கைது
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கல்; நெல்லிக்குப்பத்தில் ஒருவர் கைது
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கல்; நெல்லிக்குப்பத்தில் ஒருவர் கைது
ADDED : மார் 06, 2024 11:24 PM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில், வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயன்பாடு இல்லாத ஒரு பழமையான வீட்டில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ஹான்ஸ் பதுக்கி வைத்திருந்த வரக்கால்பட்டை சேர்ந்த தனகோடி, 55; என்பவரை கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.