ADDED : ஜன 07, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்த 7 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி அருள்மொழி, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் ஆகியோர் சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பெட்டிக் கடைகளில் குட்கா பதுக்கி விற்றதாக ஸ்ரீமுஷ்ணம் பட்டி தெரு, சுமதி, பரிமளா, கொண்டசமுத்திரம் சுந்தர், அறந்தாங்கி ரங்கசாமி, சித்தமல்லி ராமச்சந்திரன், மாமங்கலம் முத்துலட்சுமி, கலியங்குப்பம் மணி ஆகியோரது பெட்டிக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.