/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது
/
குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது
ADDED : செப் 11, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்
குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வெங்கடாம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது.
இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ரவி, 60; என்பவரை போலீசார் கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.