ADDED : பிப் 09, 2024 06:40 AM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்:பெண்ணாடத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடத்தில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று காலை பெண்ணாடம் பகுதியில் சந்தேகத்திற்குட்பட்ட கடைகள், வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெண்ணாடம் வடக்கு ரத வீதி முருகானந்தம், 33, என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்தனர்.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
