ADDED : மார் 25, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, ஆலடி சாலையில் இருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரிந்தது. அங்கிருந்த 32 பாக்கெட் குட்கா மற்றும் 1,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பெட்டிக்கடை உரிமையாளர் நுார்முகமது, 59, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.