/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா கடத்தியவர் கைது 25 கிலோ பறிமுதல்
/
குட்கா கடத்தியவர் கைது 25 கிலோ பறிமுதல்
ADDED : நவ 02, 2025 04:14 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே 25 கிலோ குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த கோவிலுார் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார், கோவிலுார் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து, அவரது ஸ்கூட்டியை திறந்து சோதனை செய்தனார். அப்போது அதில், தடைசெய்யப்பட்ட, 25 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் செல்வம், 49; என்பவரை கைது செய்தனர்.
ஹான்ஸ், குட்கா மற்றும் ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

