/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரியில் குட்கா கடத்தல்; பண்ருட்டி அருகே 2 பேர் கைது
/
லாரியில் குட்கா கடத்தல்; பண்ருட்டி அருகே 2 பேர் கைது
லாரியில் குட்கா கடத்தல்; பண்ருட்டி அருகே 2 பேர் கைது
லாரியில் குட்கா கடத்தல்; பண்ருட்டி அருகே 2 பேர் கைது
ADDED : ஜன 31, 2025 11:02 PM

பண்ருட்டி; பண்ருட்டி அருகே கர்நாடகாவில் இருந்து லாரியில் குட்கா பொருட்கள் கடத்தி வந்த டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரில், கர்நாடக மாநிலத்தில் இருந்து மரவாடிக்கு மரம் ஏற்றி வரும் லாரியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக, முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப் இன்ஸ்பெக்டர் சிவராமன், ஏட்டு ராஜேஷ், போலீசார்கள் பலராமன், ராமசந்திரன் ஆகியோர் காட்டுக்கூடலுாரில் உள்ள மரவாடி ஒன்றில் நின்றிருந்த லாரியை சோதனை செய்தனர்.
அதில், காட்டுக்கூடலுார் வடக்கு தெருவை சேர்ந்த அருள்முருகன், 42; நேற்றுமுன்தினம் தென்னை மரம் ஏற்றி வந்த லாரியில் கூலிப் 240 பாக்கெட், விமல் பான்மசாலா -600 பாக்கெட், வி1 டொபாக்கோ -600 பாக்கெட் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அருள்முருகன், திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் மிட்டு,59; ஆகியோரை கைது செய்தனர்.