UPDATED : அக் 12, 2026 07:59 PM
ADDED : அக் 12, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நரியன்குப்பத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வடந்த டி.என் 31 சி.எச் 8520 பதிவெண் கொண்ட பேஷன்புரோ பைக்கை நிறுத்தி, சோதனை செய்தனர்.
அதில், பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட 570 ஹான்ஸ் பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து, ஹான்ஸ் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்தி வந்த பத்திரக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த ஏழுமலை,52;யை கைது செய்தனர்.
