ADDED : டிச 23, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் ஹான்ஸ் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சிந்தாமணிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், 49; என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

