ADDED : மார் 18, 2026 05:12 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை சாவடிக்குப்பம் கிராமத்தில் ஹான்ஸ் புகையிலை விற்கப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், செந்தமிழ்ச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சாவடிக்குப்பம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது சாவடிக்குப்பம் நிசங்கன் தெருவில் பெட்டிக்கடை வைத்துள்ள கோவிந்தன், 51; என்பவர் வீட்டில் ஆய்வு செய்த போது 30 பாக்கெட்டுகள் ஹான்ஸ் புகையிலை இருந்தது தெரியவந்தது. உடனே ஸ்ரீபோலீசார் கோவிந் தனை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
