ADDED : மார் 21, 2026 05:13 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: அனுமதியின்றி ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்ற பெட்டிக்கடை பெண் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 12:00 மணியளவில் ரோந்து சென்றனர்.
அப்போது, பெருமுளை சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது அனுமதியின்றி, விற்க பதுக்கி வைத்திருந்த, 20 கிலோ எடையிலான ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடை உரிமை யாளர் வதிஷ்டபுரம், ராஜா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலட்சுமி, 55, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
