
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் மூலம் நட்சத்திரத்தையொட்டி பக்த ஆஞ்சநேயருக்கு நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்த ஆஞ்சநேயருக்கு நேற்று காலை திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இரவு வீதியுலா நடந்தது.