ADDED : டிச 31, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கோவில்களில் அனுமன் ஜெயந்தியொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 1,008 வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேப் போன்று திருப்பாதிரிப்புலியூர், தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பக்த ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை மூலவருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் வீதியுலா நடந்தது.