ADDED : டிச 20, 2025 06:45 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் எஸ்.பி.டி.எஸ்., நகரில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9:00 மணிமுதல் 12:00 மணி வரை சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம், 1,008 வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சூர்ய பிரபை வாகனத்தில் ராமர் வீதி உலா நடந்தது. அதேபோல, கீழ்புவனகிரி வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அன்னதானம் வழங்கினர். மாலையில் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.
