ADDED : மார் 10, 2024 06:32 AM

அ நிறம் | அளவு
கடலுார், : கடலுார், துறைமுகம் செயின்ட் பிலோமினாஸ் அரசு உதவிப் பெறும் பெண்கள் துவக்க பள்ளியில் 113வது ஆண்டு விழா நடந்தது.
ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின், ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான கணினி பயன்படுத்த 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பங்குதந்தை பாஸ்கல் ராஜ், தாளாளர் கிளாரா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நிர்மலா மேரி வரவேற்றார். ஆசிரியர் அறிவுமதி, வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி வாழ்த்தி பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
