ADDED : டிச 17, 2025 06:48 AM

நெய்வேலி: கீழ்க்கொல்லை கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி துவங்கியது.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மருங்கூர் ஊராட்சியின் கீழ்க்கொல்லை கிராமத்தில் தமிழக அரசின் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ,, துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி,' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சபிதா, டாக்டர் அறிவொளி, உதவி பொறியாளர் மவுசிகா, ஊராட்சி செயலாளர் ஜனார்த்தனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், கிளை செயலாளர் தன்ராஜ், சிவா, ஹரி, ராமன், வீரமணி, ரங்கநாதன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
