/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
/
குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ADDED : டிச 09, 2024 07:07 AM
மந்தாரக்குப்பம் : வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் பருவமழைக்கு பின் காலை மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு, இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி, உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாறி வரும் சீதோஷ்ண நிலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைரஸ் காய்ச்சல் பரவமால் தடுக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் எனவும் நோய் பரவமால் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.