UPDATED : ஆக 20, 2026 09:35 PM
ADDED : ஆக 20, 2026 09:22 PM

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடலுார் மாவட்டத்தில் கத்தரி வெயில் முடிந்தும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை துவங்கும் அனல்காற்று இரவு வரை நீடிக்கிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 19 இரவு கடலுாரில் திடீரென மழை பெய்தது. காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 6:00 மணிக்கு கடலுார், பண்ருட்டி, சேடப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் திடீரென சூறாவளி காற்று வீதியது. சிறிது நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 7:15 மணி வரை ஒரு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
பண்ருட்டி: மாலை 6:30 மணி அளவில் அண்ணாகிராமம் பகுதியில் பயங்கர சப்தத்துடன் மின்னல் தாக்கியது. அதில், , பாபுகுளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்,75;வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரம், கொட்டும் மழையில் தீ பிடித்து எரிந்தது. பண்ருட்டி, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
