ADDED : ஜன 06, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், பலத்த காற்று எதிரொலியால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக் கூடாது என, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வட தமிழக மாவட்டங்களில் இன்று 6ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக நாளை 7ம் தேதி கடலுார் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், கடலுார் மாவட்ட மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், கடல் காற்று மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல், 8ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.இத்தகவலை கடலுார் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.