/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கனரக லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை மனு
/
கனரக லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை மனு
ADDED : ஆக 26, 2025 07:05 AM
கடலுார் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஒப்பந்த பணியில் கனரக லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டுமென, உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாவட்ட கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஒப்பந்த பணியில் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று லாரிகளை இயக்கி வருகிறது.
இதனால் கடலுார் மாவட்ட கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள 200க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்க வாய்ப்பு வழங்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள மாவட்டங்களில் லாரி உரிமையாளர்கள் சங்கங்களே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து இயக்கப் பணியை மேற்கொள்கிறது.
கடலுார் மாவட்டத்தில் மட்டும் ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.