/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
கடலுாரில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 06, 2025 06:47 AM

கடலுார்: கடலுாரில் சாலை பாதுகாப்பு மற்றும் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட போக்குவரத்து காவல் துறை மற்றும் சிப்காட் கவுமன் பார்மா நிறுவனம் ஆகியன இணைந்து பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. டவுன்ஹால் அருகில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
டி.எஸ்.பி., ரூபன்குமார், சாலை விபத்துக்கள், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள், பொது நல அமைப்பு, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள், ஹெல்மெட் அணிந்து பைக்கில் பேரணியாக சென்றனர்.
பேரணி பாரதி ரோடு, இம்பீரியல் ரோடு, ஜவான்பவன் சிக்னல் வழியாக மீண்டும் டவுன் ஹாலில் முடிந்தது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், சிவக்குமார், பார்மா நிறுவனத்தின் நிர்வாகி கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.