/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
கடலுாரில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 11, 2025 07:03 AM

கடலுார் : கடலுார் டவுன்ஹால் அருகில் ெஹல்மெட் விழிப் புணர்வு பேரணி நடந்தது.
அப்துல்கலாம் இருசக்கர மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம் மற்றும் காவல் துறை ஆகியன இணைந்து பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சங்கத் தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ரூபன்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயக்குமார் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் கோபிநாத், நிர்வாகிகள் சக்திவேல், ராஜசேகர், முருகன், வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.