/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'
/
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'
ADDED : மார் 05, 2024 05:53 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் தாங்களே அகற்றி கொள்ள வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் ஒட்டினர்.
சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2017ம் ஆண்டு அளவீடு செய்து அத்துக்கல் நட்டனர்.
ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை அதிகாரிகள் அகற்ற வரும்போது கடைக்காரர்கள், குடியிருப்பு வாசிகள் வழக்கினை காரணம் காட்டி தடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி சேத்தியாத்தோப்பு கடைவீதியில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தீர்ப்பளித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு காலக்கெடு வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அன்பரசன், வருவாய்த்துறையினருடன் சென்று சேத்தியாத்தோப்பு கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு எச்சரித்து சென்றனர்.

