/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பாதுகாப்பு பேரணி
/
நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பாதுகாப்பு பேரணி
ADDED : ஜன 27, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு குறிஞ்சிப்பாடி உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் கோட்டப்பொறியாளர் சிவக்குமார், உதவி கோட்டப்பொறியாளர்கள் வினோத்வெங்கடேஷ், கண்ணன், இளைநிலை பொறியாளர் ஜெகன், உதவிப்பொறியாளர் தர்மராஜ், கல்லுாரி முதல்வர் ஆனந்த் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பேரணி சென்றனர்.
கோட்டப்பொறியாளர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.