/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
ADDED : செப் 24, 2024 05:59 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலத்தை அதிரடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 38 சென்ட் நிலம் உள்ளது. நிலத்தை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் இருபது ஆண்டுகளாக ஆக்கிரமித்து செங்கல் சூளை போட்டு வந்தனர்.
நிலத்தை மீட்க அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனு, கடலுார் இணை ஆணையர் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதியானது.
அதைத்தொடர்ந்து, நேற்று பகல் 11:00 மணியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன், கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் விருத்தாசலம் தீயணைப்புத்துறை, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.