/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊர்க்காவல் படை பணி உடல் தகுதி தேர்வு
/
ஊர்க்காவல் படை பணி உடல் தகுதி தேர்வு
ADDED : அக் 05, 2024 11:21 PM

கடலுார்: கடலுாரில் ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 காலிப் பணியிடங்களை (18 ஆண், 2 பெண்) நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
இப்பணிக்கு 418 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், தேர்வுக்கு 353 பேர் வந்திருந்தனர். மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உடல் தகுதி தேர்வை பார்வையிட்டார்.
தேர்வில் உயரம், எடை, மார்பளவு, சான்றிதழ் சரிபார்ப்பு என பல கட்டங்களாக நடந்தது. தேர்வு பணியில் டி.எஸ்.பி., சவுமியா, ஊர்க்காவல் படை விழுப்புரம் உதவி சரக தளபதி கேதார்நாதன், வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.