ADDED : மார் 15, 2024 11:43 PM

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் வாயிற் முழக்க போராட்டம் நடந்தது.
கவுரவ விரிவுரையாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சுதாகர், இளவரசன் முன்னிலை வகித்தனர்.
இதில், டி.ஆர்.பி., மூலம் அரசு கல்லுாரியில் உள்ள 4,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கிள்ளை
சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில், ஈடுப்பட்டனர்.
திருவண்ணாமலை மண்டல தலைவர் சக்திநாதன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். கிளை தலைவர் ரோஷினி வரவேற்றார்.
போராட்டத்தில், கிளை செயலாளர் தேவேந்திரன் உட்பட 38 கவுர விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
