/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு
UPDATED : ஆக 09, 2024 12:41 PM
ADDED : ஆக 09, 2024 04:56 AM

கடலுார்: கடலுார் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகி தம்புராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜன், கல்யாண்குமார் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் தணிகாசலம், சுரேஷ் நீலகண்டன், வாசுதேவன் சிறப்புரையாற்றினர்.
புதிய தலைவராக விமல்ராஜ், செயலாளராக நிவாஸ் அரவிந்தன், பொருளாளராக சரத் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
இதில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் ஜெயஸ்ரீ முருகேசன், நடராஜன், சண்முகம், ராஜபிரகாஷ், சாம்ராஜ், இயக்குனர்கள் குமார், இஸ்ரோல், பாஸ் கரன், லட்சுமி நாராயணன், சண்முகம், நர்மதா தம்புராஜ், தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.